/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்கில் இருந்து விழுந்தவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
/
பைக்கில் இருந்து விழுந்தவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
பைக்கில் இருந்து விழுந்தவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
பைக்கில் இருந்து விழுந்தவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
ADDED : மே 10, 2025 02:56 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 20; கூலித்தொழிலாளி. இவர், நேற்று பணி தொடர்பாக மீஞ்சூரில் இருந்து பொன்னேரி செல்வதற்காக, 'பஜாஜ் பல்சர்' பைக்கில், பொன்னேரி - மீஞ்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
மீஞ்சூர் பஜார் பகுதி அருகே சென்றபோது, நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த 'ஐய்ச்சர்' லாரி, அஜித்குமார் மீது மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி அஜித்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அஜித்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.