/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி
/
சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி
ADDED : மார் 16, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில், நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பெருவாயல் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.