/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண்டல அபிஷேகம் நிறைவு அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
/
மண்டல அபிஷேகம் நிறைவு அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
ADDED : ஜன 08, 2025 12:54 AM

திருத்தணி:திருத்தணி கன்னிகாபுரம் ரோடு கன்னிக்கோவில் எதிரில், சிவ - விஷ்ணு துர்கையம்மன் மற்றும் ஸ்ரீவம்ச வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் கடந்த நவம்பர் மாதம் கடைசி வாரம் நடந்தது.
அதை தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று, 48வது நாள் மண்டலாபிஷேக நிறைவையொட்டி, காலை 10:00 மணிக்கு, 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலம் திருத்தணி - அரக்கோணம் சாலை முக்கண் விநாயகர் கோவிலில் புறப்பட்டு, இந்திரா நகர் வழியாக கோவில் வளாகம் வந்தடைந்தது.
அதை தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.