/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளாஸ்டிக் இல்லா கல்வி, வணிக நிறுவனங்களுக்கு 'மஞ்சப்பை' விருது
/
பிளாஸ்டிக் இல்லா கல்வி, வணிக நிறுவனங்களுக்கு 'மஞ்சப்பை' விருது
பிளாஸ்டிக் இல்லா கல்வி, வணிக நிறுவனங்களுக்கு 'மஞ்சப்பை' விருது
பிளாஸ்டிக் இல்லா கல்வி, வணிக நிறுவனங்களுக்கு 'மஞ்சப்பை' விருது
ADDED : டிச 01, 2025 03:35 AM
திருவள்ளூர்: பிளாஸ்டிக் பயன்படுத்தாத கல்வி, வணிக நிறுவனங்கள் 'மஞ்சப்பை' விருதை பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மஞ்சப்பை போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காதவற்றை ஊக்குவிக்கும் வகையில், தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது.
முதல் பரிசாக 10 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 5 லட்சம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இத்தகைய மாற்றத்தினை உருவாக்கி, முன்மாதிரியான பங்களிப்பை செய்த பள்ளி, கல்லுாரி மற்றும் வணிக நிறுவனங்கள், இந்த விருதை பெற, www.tntiruvallurawards.co m என்ற இணையதளத்தில், ஜன., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.