/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வந்தது திருமணம் ஊராட்சி அலுவலகம்
/
பயன்பாட்டிற்கு வந்தது திருமணம் ஊராட்சி அலுவலகம்
ADDED : ஜன 04, 2025 09:44 PM
திருமழிசை:திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட திருமணம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்திருப்பதால், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2024- - 25-ன்கீழ், 30 லட்சம் ரூபாயில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது..
இதையடுத்து, புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா, நேற்றுமுன்தினம், பூந்தமல்லி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி முன்னிலையில், ஊராட்சி தலைவர் ராதிகாவீரன் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி. பங்கேற்று, 30 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து, பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.