/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பச்சைப்பயறு அறுவடைக்கு இயந்திரம் மெதுார் கூட்டுறவு சங்கம் அறிவிப்பு
/
பச்சைப்பயறு அறுவடைக்கு இயந்திரம் மெதுார் கூட்டுறவு சங்கம் அறிவிப்பு
பச்சைப்பயறு அறுவடைக்கு இயந்திரம் மெதுார் கூட்டுறவு சங்கம் அறிவிப்பு
பச்சைப்பயறு அறுவடைக்கு இயந்திரம் மெதுார் கூட்டுறவு சங்கம் அறிவிப்பு
ADDED : ஏப் 15, 2025 01:18 AM

பொன்னேரி,மீஞ்சூர் வேளாண் வட்டாரத்திற்கு உட்பட்ட பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 4,500 ஏக்கர் பரப்பளவில் பச்சைப்பயறு பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது, அறுவடைக்கு தயாரான நிலையில், பணியாட்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், பொன்னேரி அடுத்த மெதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில், புதிதாக பச்சைப்பயறு பிரித்து எடுக்கும் இயந்திரம் வாங்கி இருப்பதாகவும், விவசாயிகள் அதை பயன்படுத்தி கொள்ளும்படியும் தெரிவித்துள்ளது.
மெதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் சசிகுமார் கூறியதாவது:
பச்சசைப்பயறு அறுவடை செய்து, பின் அதை டிராக்டர்களில் உழுது பயறுகளை பிரிப்பர். இதில், பயறுகள் அதிகம் வீணாகும். அதிக நேரம் செலவிட வேண்டும்.
தற்போது, விவசாயிகளுக்கு உதவும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில், பச்சைப்பயறு செடிகளை உள்ளே போட்டால், பயறு தனியாகவும், இலை மற்றும் துாசி தனியாகவும் பிரித்து தருகிறது.
ஒரு மணி நேரத்தில், 2 - 3 ஏக்கர் பரப்பளவிலான பச்சப்பயறு செடிகளை போட்டு, பயறுகளை தனியாக பிரித்து விடலாம். ஒரு மணி நேரத்திற்கு, 1,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேவையான விவசாயிகள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.