/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் ஓகே; மருத்துவர் எங்கே?
/
'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் ஓகே; மருத்துவர் எங்கே?
'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் ஓகே; மருத்துவர் எங்கே?
'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் ஓகே; மருத்துவர் எங்கே?
ADDED : பிப் 15, 2024 02:30 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், சேர்மன் சிவகுமார் தலைமையில் நேற்று நடந்தது. பி.டி.ஓ., சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வரவு - செலவு, திட்டம், தொழிற்சாலை அனுமதி உள்ளிட்ட, 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:
ரவிக்குமார் - மா.கம்யூ.,: அரசு சார்பில் போதிய நிதி ஒதுக்கப்படாததால், கிராமப்புறங்களில் ஏராளமான மக்கள் நலத் திட்ட பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
அதனால், சி.எஸ்.ஆர்., எனப்படும் தொழிற்சாலை நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிதி பெற்று, மக்கள் நலத் திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சீனிவாசன் - அ.தி.மு.க.,: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் முறையாகச் செயல்படவில்லை. மாறாக, அந்த மருத்துவக் குழுவினர் எங்கு இருக்கின்றனர் என்பது கூட தெரியவில்லை. அந்த திட்டத்தை முறையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர் - பா.ம.க.,: எளாவூர், ஏழு கண் பாலம் அமைந்துள்ள பகுதியில், படகு குழாமுடன் கூடிய சுற்றுலா தளம் ஏற்படுத்த, 2018ம் ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்பின், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. உடனடியாக மறுபரிசீலனை செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஜெயசந்திரன் - தி.மு.க.,: கோடைக்காலத்தை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். சித்தராஜகண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் நிறுவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதையடுத்து, 'கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படும்' என, சேர்மன் சிவகுமார் தெரிவித்தார்.

