/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : ஆக 20, 2025 11:01 PM
திருவள்ளூர்:வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், நாளை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும்.
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறியியல் உள்ளிட்ட வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும், மாவட்ட அளவிலான கூட்டத்தில் விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.