/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் 'மெகா' பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு உயிர்பலி அபாயம்
/
சாலையோரம் 'மெகா' பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு உயிர்பலி அபாயம்
சாலையோரம் 'மெகா' பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு உயிர்பலி அபாயம்
சாலையோரம் 'மெகா' பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு உயிர்பலி அபாயம்
ADDED : ஜூன் 15, 2025 02:46 AM

திருவள்ளூர்:பூண்டியில் இருந்து அரும்பாக்கம் கிராமத்திற்கு, புதிதாக அமைக்கப்பட்ட சாலையோரத்தில் ஏற்பட்ட 'மெகா' பள்ளத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது அரும்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் திருப்பேர், பங்காரம்பேட்டை மற்றும் அரும்பாக்கம் கிராமம் உள்ளன.
இதில், அரும்பாக்கம் கிராமம், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதையை கடந்து செல்ல வேண்டும். இந்த வாசிகள் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட எவ்வித அவசர தேவைக்கும், பூண்டி வழியாக திருவள்ளூர் வந்து செல்ல வேண்டும்.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின், வனத்துறை அனுமதியுடன், கடந்த மார்ச் மாதம், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 கி.மீ., துாரத்திற்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையோரம் மண் குவிக்காததால், சாலை முழுதும் பள்ளமாக உள்ளது.
இதனால், நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் தவறி விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல், பூண்டி - மேட்டுப்பாளையம் கிராமத்திறகு புதிதாக அமைக்கப்பட்ட சாலையோரமும் 'மெகா' பள்ளம் உள்ளது. எனவே, இச்சாலையோரங்களில் மண் குவித்து, பள்ளத்தை நிரப்ப வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.