/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை மருத்துவமனை வேண்டும் மெய்யூர் கிராம மக்கள் கோரிக்கை
/
கால்நடை மருத்துவமனை வேண்டும் மெய்யூர் கிராம மக்கள் கோரிக்கை
கால்நடை மருத்துவமனை வேண்டும் மெய்யூர் கிராம மக்கள் கோரிக்கை
கால்நடை மருத்துவமனை வேண்டும் மெய்யூர் கிராம மக்கள் கோரிக்கை
ADDED : அக் 12, 2025 10:08 PM
ஊத்துக்கோட்டை:மெய்யூர் கிராமத்தில், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை வட்டம், மெய்யூர் ஊராட்சியில், மெய்யூர், ராஜபாளையம், வெம்பேடு, குருபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். கால்நடைகளும் அதிகளவு வளர்க்கின்றனர்.
குறிப்பாக, மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் பாலை விற்று அதிக மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இறைச்சிக்காக ஆடுகளும் அதிகம் வளர்க்கப்படுகிறது.
கால்நடைகள் திடீரென நோயால் பாதிக்கப்பட்டால், 10 கி.மீ., துாரமுள்ள பீமந்தோப்புக்கு செல்ல வேண்டி உள்ளது. நோய் தாக்கம் அதிகமாக இருந்தால், சிகிச்சைக்கு எடுத்து செல்லும் முன், கால்நடைகள் இறந்து விடுகின்றன.
இதனால், அப்பகுதி மக்களின் பொருளாதாரம் சிக்கலாகி விடுகிறது.
எனவே, மெய்யூர் கிராம ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.