தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மனநலம் பாதித்த முதியவர் மாயம்

மனநலம் பாதித்த முதியவர் மாயம்

மனநலம் பாதித்த முதியவர் மாயம்


UPDATED : அக் 16, 2026 03:26 PM

ADDED : அக் 16, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 03:26 PM ADDED : அக் 16, 2026 03:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட 78 வயது முதியவர் மாயமானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 47, என்பவரின் தந்தை இளங்கோவன், 78. ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்.

சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், தினமும் காலை 9:00 மணிக்கு, வீட்டிலிருந்து திருவள்ளூர் சென்று, நண்பர்களை பார்த்து விட்டு, பின் வீடு திரும்பி வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் வீட்டிலிருந்து திருவள்ளூருக்கு புறப்பட்டு சென்றவர், அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, கண்ணன் நேற்று கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us