/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் நள்ளிரவு மழை மின் விநியோகம் நிறுத்தம்
/
கும்மிடியில் நள்ளிரவு மழை மின் விநியோகம் நிறுத்தம்
கும்மிடியில் நள்ளிரவு மழை மின் விநியோகம் நிறுத்தம்
கும்மிடியில் நள்ளிரவு மழை மின் விநியோகம் நிறுத்தம்
ADDED : அக் 20, 2024 12:50 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் துவங்கிய மழை அதிகாலை வரை, பெய்தது. பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால், நள்ளிரவு முதல் அதிகாலை வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால், கோட்டக்கரை அண்ணா நகரில் உள்ள சாய்பாபா நகர் முதல் தெரு, புதுகும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம், கோரிமேடு ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், அவர்களின் சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை --- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் சந்திப்பு, தாசில்தார் அலுவலகம், ஓபுளாபுரம், தச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் குளம் போல் மழை வெள்ளம் தேங்கியது. இதனால், அப்பகுதிகளை கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.