/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரும்பு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு
/
இரும்பு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு
இரும்பு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு
இரும்பு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 04, 2025 02:16 AM

ஊத்துக்கோட்டை:இரும்பு மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களை, தி-.மு.க., அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.
ரூ.621 கோடி சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, ஆங்காங்கே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், புதிய முயற்சியாக இரும்பு மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக, தே னாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே, 3 கி.மீ.,க்கு இரும்பு மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, 621 கோ டி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்திற்கு, 11 வகை இரும்பு துாண்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயார் செய்வதற்கு, தமிழக அரசு சார்பில், திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள 'பெண்ணார் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெறும் பணிகளை நேற்று, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.
ஒப்பந்தம் அதன்பின், அமைச்சர் கூறியதாவது:
சென்னை தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே, 3 கி.மீ.,க்கு மேம்பாலம் அமைக்க, 621 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான இரும்பு துாண்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிக்கு, ஐந்து இடங்களில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, மும்பை, குஜராத், ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது, கன்னிகைப்பேருக்கு வந்துள்ளேன். அடுத்த வாரம், சத்தீஸ்கரில் ஆய்வு செய்ய உள்ளேன்.
பின், பருவ மழைக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, ஒவ்வொரு வாரமும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மழைக்கு முன், அனைத்து பாதுகாப்பு பணிகளும் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.