/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் வினியோகமில்லை தாழவேடு பெண்கள் மறியல்
/
குடிநீர் வினியோகமில்லை தாழவேடு பெண்கள் மறியல்
ADDED : அக் 04, 2025 02:14 AM

திருத்தணி:தாழவேடு கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகிக்காததால், அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு அருந்ததி காலனி குடியிருப்பில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளை கிணறுகள் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு மாதங்களாக குடிநீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்து, மின் மோட்டார் அடிக்கடி பழுது ஏற்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று காலை குடிநீர் வராததை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் திருத்தணி- - நல்லாட்டூர் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் தொடர்ந்தது.
ஆனால், திருவாலங்காடு ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் யாரும் பேச்சு நடத்த வராததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.