/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்' :காக்களூரில் அமைச்சர் அடிக்கல்
/
ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்' :காக்களூரில் அமைச்சர் அடிக்கல்
ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்' :காக்களூரில் அமைச்சர் அடிக்கல்
ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்' :காக்களூரில் அமைச்சர் அடிக்கல்
ADDED : டிச 16, 2025 04:38 AM
திருவள்ளூர்: காக்களூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில், 'மினி ஸ்டேடியம்' அமைக்க, அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழகம் முழுதும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒரு 'மினி ஸ்டேடியம்' அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக அவசர அவசரமாக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது.
திருவள்ளூர் ஒன்றியம், காக்களூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில், 3 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வரின் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார்.
பின், அமைச்சர் கூறியதாவது:
காக்களூரில், 7 ஏக்கர் பரப்பளவில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 லட்சம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2.50 கோடி என, மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பில், சிறிய விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது.
அங்கு, ஓடு தளம், நவீன உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கூடைப்பந்து அரங்கு, கைப்பந்து அரங்கு, கோ-கோ அரங்கு ஆகியவை அமைக்கப்படும். அதேபோல், மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூவலம்பேடு ஊராட்சியிலும், சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

