/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநகராட்சி, நகராட்சிகளுக்கு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் நேரு தகவல்
/
மாநகராட்சி, நகராட்சிகளுக்கு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் நேரு தகவல்
மாநகராட்சி, நகராட்சிகளுக்கு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் நேரு தகவல்
மாநகராட்சி, நகராட்சிகளுக்கு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் நேரு தகவல்
ADDED : மே 01, 2025 01:45 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், ம.பொ.சி.சாலையில் வியாபாரிகள் நலன் கருதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், 2023 - 24ம் ஆண்டின் கீழ், 3.02 கோடி ரூபாய் மதிப்பில் காமராஜர் காய்கறி நாளங்காடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் முன்னிலை வகித்தார். இதில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பங்கேற்று, காய்கறி நாளங்காடியை திறந்து வைத்தார்.
பின், அமைச்சர் நேரு பேசியதாவது:
தமிழகத்தில், 15 மாநகராட்சிகள் இருந்தன. தற்போது, 10 மாநகராட்சிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், 130 நகராட்சிகளை பிரித்து, 160 நகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு ஆண்டுதோறும், 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறார். நான்கு ஆண்டுகளில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அரக்கோணம் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன்.
பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், வருவாய் கோட்டாட்சியர் தீபா, நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணி, நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணை தலைவர் சாமிராஜ் உட்பட நகர்மன்ற கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அதேபோல், திருத்தணி- அரக்கோணம் சாலையில், அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 4.5 ஏக்கர் பரப்பளவில், 15.67 கோடி ரூபாய் மதிப்பில், நவீன பேருந்து நிலையம் கட்டடம் கட்டும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
தற்போது, 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், நேற்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, சிறுபான்மை துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து நேரு கூறுகையில், “இரு மாதத்திற்குள் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரவேண்டும். திருத்தணியில் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இரு மாதத்தில் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும்.
“மேலும், திருத்தணியில் பாறைகள் அதிகம் உள்ளதால், பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது,” என்றார்.