sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முகத்துவாரத்தில் இரவில் அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு பழவேற்காடு மீனவர்கள் அதிருப்தி

/

முகத்துவாரத்தில் இரவில் அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு பழவேற்காடு மீனவர்கள் அதிருப்தி

முகத்துவாரத்தில் இரவில் அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு பழவேற்காடு மீனவர்கள் அதிருப்தி

முகத்துவாரத்தில் இரவில் அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு பழவேற்காடு மீனவர்கள் அதிருப்தி


ADDED : அக் 27, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு: நிரந்தர முகத்துவாரத்திற்காக, 26.85 கோடி ரூபாய் செலவிட்டும், மணல் திட்டுகள் குவிந்திருப்பதால், மீனவர்களின் சிரமங்கள் தொடரும் நிலையில், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இரவு நேரம் வந்து ஆய்வு செய்தது, மீனவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பழவேற்காடு மீனவர்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, 26.85 கோடி ரூபாயில், 2023 ஜனவரியில், கடலும் ஏரியும் இணையும் பகுதியில், நிரந்தர முகத்துவாரத்திற்கான பணிகள் துவக்கப்பட்டன.

கடல் மற்றும் ஏரியின் வடக்கு பகுதியில், 160 மீ., நீளம், தெற்கு பகுதியில் 150 மீ., நீளம் மற்றும், 4.5 மீ., உயரத்தில் பாறை கற்களை கொண்டு, இருபுறமும் அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.

அலை தடுப்பு சுவர்களுக்கு இடையில் உள்ள பகுதியில், 200 -- 280 மீ., அகலம், 3 மீ., ஆழத்தில், 'டிரஜ்ஜர்' இயந்திரங்கள் உதவியுடன் மணல் திட்டுகள் வெளியேற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் முடிந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். ஆனால், அலை தடுப்புச்சுவர்களுக்கு இடையே மணல் திட்டுகள் குவிந்து, பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமல், மீனவர்களின் சிரமங்கள் தொடர்ந்தன.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக, நேற்று முன்தினம் அமைச்சர் நாசர், வடகிழக்கு பருவமழைக்கான திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன், கலெக்டர் பிரதாப், பொன்னேரி எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் ஆகியோர், பழவேற்காடில் ஆய்வு மேற்கொண்டனர்.

இரவு 7:00 மணிக்கு முகத்துவாரத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இது, மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:

பகல் நேரங்களில் ஆய்வு செய்தால் தான் கடல் எது, ஏரி எது என தெரியும். அங்கு, என்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பதை அறிய முடியும். கண்துடைப்பிற்காக இரவு நேரத்தில் ஆய்வு செய்துள்ளனர்.

தற்போது அமைக்கப்பட்ட நிரந்தர முகத்துவாரம் மீனவர்களுக்கு பயனற்றதாகவே உள்ளது. கடந்த காலங்களை போல், பொக்லைன் இயந்திரங்களை வைத்து தான், தற்போதும் மணல் திட்டுக்கள் வெளியேற்றப்படுகின்றன.

இதற்கு, 26.85 கோடி ரூபாய் செலவிட வேண்டும். தமிழக அரசு உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பார்வையிடும் அதிகாரிகளும், பகல் நேரங்களில் வந்தால் தான் அங்குள்ள நிலை தெரியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us