sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

7வது முறையாக அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சேதம்... சீரமைப்பு

/

7வது முறையாக அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சேதம்... சீரமைப்பு

7வது முறையாக அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சேதம்... சீரமைப்பு

7வது முறையாக அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சேதம்... சீரமைப்பு


UPDATED : அக் 27, 2025 04:38 AM

ADDED : அக் 27, 2025 12:53 AM

Google News

UPDATED : அக் 27, 2025 04:38 AM ADDED : அக் 27, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: ஒவ்வொரு ஆண்டும் கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது குப்பம்கண்டிகை, எல்.வி.புரம் தரைப்பாலம் மூழ்குவதும், அடித்து, செல்லப்படுவதும் தொடர்கிறது. அப்போது அதிகாரிகள், ஆட்சியாளர்கள் சுற்றுலா வருவது போல பார்வையிட்டு செல்வதாகவும், நிரந்தர தீர்வாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை, எல்.வி.புரம் கிராமங்களில் வசிக்கும் மக்கள், கொசஸ்தலையாற்றை கடந்து செல்ல, ஆற்றின் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, முதல் முறையாக தரைப்பாலம் உடைந்தது. பின், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைத்தனர்.

அதன்பின், 2019, 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டு என, தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்வதும், ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைப்பதும் தொடர்கதையானது.

கனமழை காரணமாக, கடந்தாண்டு டிசம்பரில் கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், தரைப்பாலம் ஆறாவது முறையாக அடித்து செல்லப்பட்டது. இதனால், குப்பம்கண்டிகை -- - பனப்பாக்கம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தற்போது பெய்து வரும் கனமழையால், ஏழாவது முறையாக மீண்டும் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால், குப்பம்கண்டிகை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு, திருவள்ளூர் செல்ல 10 கி.மீ., சுற்றிக்கொண்டு திருவாலங்காடு வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த ஆறு முறை குப்பம்கண்டிகை தரைப்பாலம் சீரமைப்பு பணிக்காக, 37 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல், எல்.வி.புரம் தரைப்பாலம் சீரமைப்பு பணிக்காக, 29 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அதேபோல், செஞ்சி, பனப்பாக்கம் மக்கள், திருத்தணி, அரக்கோணம் செல்ல, 12 கி.மீ., சுற்றிக்கொண்டு கடம்பத்துார் வழியாக பேரம்பாக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எல்.வி.புரம் மக்கள், திருவாலங்காடு, சின்னம்மாபேட்டைக்கு செல்ல, 10 கி.மீ., சுற்றி பாகசாலை வழியாக சென்று வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

ஒவ்வொரு முறையும் தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைப்பதை விடுத்து, மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டாடுகிறோம்.

பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். மற்ற பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், எங்கள் கிராமத்தில் 20 ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

தமிழக அரசும், அதிகாரிகளும் எங்களை வஞ்சிக்கின்றனர். பருவமழையின் போது திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் சுற்றுலா வந்ததை போல பார்வையிட்டு செல்கிறார். அவருடன் வரும் அதிகாரிகளும், 'மேம்பாலம் அமைக்கப்படும்' என உறுதியளிக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நந்தியாற்றின் தரைப்பாலம்

மழை வெள்ளத்தால் சேதம்



திருத்தணி - பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அகூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே, 35 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில், நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, தரைப்பாலத்தின் மீது, 5 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர்கதையாகி உள்ளது.

இதனால், திருத்தணியில் இருந்து பள்ளிப்பட்டுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், 25 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், 7.50 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணியை துவக்கினர்.

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நந்தியாற்றின் தரைப்பாலம் சேதமடைந்து வந்தது. நெடுஞ்சாலை துறையினர் முன்னெச்சரிக்கையாக, தரைப்பாலம் அரிப்பு ஏற்பட்ட இடத்தில், 1,500க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாததால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில் நிதி ஒதுக்கப்படும்


இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட பொதுப் பணித்துறை அதிகாரி கூறியதாவது: கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், எல்.வி.புரத்தில் மேம்பாலம் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. நிதி ஒதுக்கப்பட்டதும், விரைந்து பணி துவங்கப்படும். குப்பம்கண்டிகையில் மேம்பாலம் அமைப்பது குறித்த கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.








      Dinamalar
      Follow us