/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன்
/
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன்
ADDED : பிப் 11, 2025 07:06 PM
திருவள்ளூர்:சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன..
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக, கல்வி கடன், தனிநபர் கடன், சுயஉதவிக் குழுவினருக்கு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையின சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கை இருத்தல் வேண்டும்.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் கடன் விண்ணப்பத்தினை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகளில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

