தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாயமான கேரளா நபர் ஏரியில் சடலமாக மீட்பு

மாயமான கேரளா நபர் ஏரியில் சடலமாக மீட்பு

மாயமான கேரளா நபர் ஏரியில் சடலமாக மீட்பு


ADDED : செப் 26, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பொழுதுபோக்கு பொருட்காட்சி பணிக்கு வந்த கேரளாவைச் சேர்ந்த குமார், 45, என்பவர், ஒதிக்காடு ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார், 45. இவர், திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள பொருட்காட்சிக்கு, கூடாரம் அமைக்கும் பணிக்காக, சில நாட்களுக்கு முன் வந்தார். கடந்த 19ம் தேதி முதல், குமார் காணாமல் போனதாக, திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு கிராமத்தில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, வி.ஏ.ஓ., விக்னேஷ், புல்லரம்பாக்கம் போலீசாருக்கு புகார் அளித்தார்.

போலீசார் அங்கு சென்று, முகம், கை, கால் ஆகிய பகுதிகள் சேதமடைந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பிரேத பரிசோதைனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், கேரளாவில் இருந்து பொருட்காட்சிக்கு கூடாரம் அமைக்க வந்த குமார் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, குமாரின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us