/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., 'டோஸ்'
/
அகூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., 'டோஸ்'
அகூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., 'டோஸ்'
அகூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., 'டோஸ்'
ADDED : ஆக 02, 2025 12:47 AM

திருத்தணி:அகூரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை, வருவாய் துறை மற்றும் ஒன்றிய நிர்வாகம் முறையாக நடத்தாததால், அதிகாரிகளுக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் 'டோஸ்' விட்டார்.
திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நேற்று 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற சிறப்பு முகாம், திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில் நடந்தது. இதில், ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.
முகாமை, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பார்வையிட்டார். அப்போது, அகூர் கிராம மக்கள் கூறியதாவது:
எங்கள் ஊரில் நடக்கும் முகாமில், நாங்கள் மனு கொடுக்க அனுமதிக்கவில்லை.
இன்று, நத்தம் கிராமத்தில் நடக்க உள்ள முகாமில், தான் மனு கொடுக்க வேண்டும் எனக்கூறி, வாங்க மறுக்கின்றனர்.இதற்காக 2 கி.மீ.,க்கு மேல் நடந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ., சந்திரன் ஒன்றிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளை அழைத்து, 'முகாமை முறையாக நடத்த வேண்டாமா? இப்படி மக்களை ஏன் அலைய வைக்கிறீர்கள்' என, கடிந்து கொண்டார்.
கடம்பத்துார் ஒன்றியம் செஞ்சி ஊராட்சியில், நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், 1,234 மனுக்கள் பெறப்பட்டன.