/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபைல், நகை வழிப்பறி நான்கு பேருக்கு 'காப்பு'
/
மொபைல், நகை வழிப்பறி நான்கு பேருக்கு 'காப்பு'
ADDED : பிப் 14, 2024 11:47 PM

திருவள்ளூர்:வெள்ளவேடு அடுத்துள்ள கூடப்பாக்கத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இங்கு, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தருண்மாஜி, 44, மற்றும் நிதாய் சவுத்ரி, 55, பினோத், 33, அப்துல் காசிம், 54, மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாபுராம், 50, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அசப் அலி, 20, ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து தொழிற்சாலைக்கு எதிரே உள்ள வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், அவர்களை தாக்கி ஆறு மொபைல்போன் மற்றும் 6,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து தருண்மாஜி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார், திருடுபோன மொபைல்போன் எண்களை வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், கூடப்பாக்கம் கலெக்டர் நகரில் பதுங்கியிருந்த சரத்குமார், 19, விக்னேஷ், 24, வடிவேல், 45, லோகேஷ், 20, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
இவர்கள் நால்வரும், வடமாநிலத்தவர் பணிபுரிந்து வந்த தொழிற்சாலையில் பணிபுரிந்தது தெரியவந்தது. பின், இவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

