/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளியிடம் மொபைல் போன் பறிப்பு
/
தொழிலாளியிடம் மொபைல் போன் பறிப்பு
ADDED : பிப் 02, 2024 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர்:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தினன்த் குமார், 35. இவர் மீஞ்சூர் அடுத்த அன்பழகன் நகர் பகுதியில் தங்கி, தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் நிறுவனம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பணிமுடிந்து பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு போனில் பேசியபடி, நடந்து சென்று கொண்டிருந்தார்.
மீஞ்சூர் பஜார் அருகே செல்லும்போது, பின்னால் பைக்கில் வந்த இருவர் தினன்த் குமாரின் மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

