/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'சமோசா' வியாபாரியிடம் மொபைல்போன் பறிப்பு
/
'சமோசா' வியாபாரியிடம் மொபைல்போன் பறிப்பு
ADDED : டிச 05, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, புட்லுாரைச் சேர்ந்தவர் ஷ்யாம் பாபு, 30; உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், மின்சார ரயிலில், 'சமோசா' வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வியாபாரத்தை முடித்து கொண்டு, ஹிந்து கல்லுாரி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர், அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்துச் சென்றார். இது குறித்து விசாரித்த ஆவடி ரயில்வே போலீசார், திருட்டில் ஈடுபட்ட பட்டாபிராம், தண்டுரை, தண்ணீர் குளத்தைச் சேர்ந்த நிதிஷ், 21, என்பவரை, கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இவர் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் மூன்று வழிப்பறி வழக்குகள் உள்ளன.