/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபைல் போன் பறிப்பு 3 பேருக்கு வலை
/
மொபைல் போன் பறிப்பு 3 பேருக்கு வலை
ADDED : பிப் 20, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் காலனியைச் சேர்ந்தவர் கோபால் மகன் தினேஷ், 36.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் தியாகராஜன், 32 என்பவருடன் மத்துார் ரயில்வே கேட் அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள், தினேஷ், தியாகராஜனை மிரட்டி, அவர்களிடம் இருந்த இரு மொபைல் போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி வழக்கு பதிந்து தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.

