/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடையில் உதவி கேட்பது போல மொபைல்போன்கள் ஆட்டை
/
கடையில் உதவி கேட்பது போல மொபைல்போன்கள் ஆட்டை
ADDED : டிச 10, 2024 12:59 AM
கும்மிடிப்பூண்டி, டகும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலையில், அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர், 32, என்பவர், மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மருந்து கடையில், காங்கேஸ்வரி, 30, திரிஷா, 19, ஆகிய இரு பெண் ஊழியர்கள் இருந்தனர்.
அப்போது, காது கேட்காது, வாய் பேச முடியாது என கூறி, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடைக்கு வந்துள்ளார்.
சான்றிதழ் ஒன்றை காண்பித்து பண உதவி கேட்டுள்ளார். பரிதாபம் கொண்ட இரு பெண் ஊழியர்களும், 10 ரூபாய் கொடுத்து அவரை வழி அனுப்பி வைத்தனர். அவர் சென்றபின், 25,000 ரூபாய் மதிப்புள்ள, இருவரது மொபைல்போன்கள் காணாமல் போனது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்த போது, உதவி கேட்டு வந்த நபர், மொபைல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மருந்து கடை உரிமையாளர் அளித்த புகாரின்படி, கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

