/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு பணம், மதுபாட்டில்கள் திருட்டு
/
டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு பணம், மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு பணம், மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு பணம், மதுபாட்டில்கள் திருட்டு
ADDED : ஜன 19, 2025 02:35 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, மத்துார் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை எண்: 8710 இயங்கி வருகிறது. இந்த கடை, ஒன்றரை கி.மீ., துாரத்தில், ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது.
நேற்று முன்தினம், மதியம் 12:00 மணிக்கு வழக்கம் போல கடையின் மேற்பார்வையாளர் அய்யப்பன் கடை திறந்து வியாபாரம் செய்தார். இரவு 10:00 மணிக்கு விற்பனை முடிந்த பின், கடையை பூட்டி, பணத்தை லாக்கரில் வைத்துவிட்டு மேற்பார்டையாளர் அய்யப்பன் வீட்டிற்கு சென்றார்.
நேற்று, மதியம் 12:00 மணிக்கு, அய்யப்பன் கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் பக்கவாட்டு சுவரி் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு இருந்ததை கண்டார்.
ஷட்டரை திறக்க முடியாததால், கடப்பாரையால் சுவரில் ஓட்டை போட்டு மர்மநபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். கடையின் உள்ளே கல்லாவில் வைக்கப்பட்டிருந்த சில்லரை நாணயங்கள், 5,000 ரூபாய், 10 மதுபாட்டில்கள் காணவில்லை.
மேலும், ஐந்து பீர்பாட்டில்கள் குடித்துவிட்டு காலி பாட்டில்களை கடையில் போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, அய்யப்பன் அளித்த புகாரின்படி, திருத்தணி டி.எஸ்.பி. கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று டாஸ்மாக் கடையை பார்த்தனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் வாயிலாக வந்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் அய்யப்பன் கூறியதாவது:
தினசரி விற்பனையாகும் மதுபாட்டில்களுக்கான தொகையை கடையில் உள்ள சேப்டி லாக்கரில் வைத்துவிட்டு, மறுநாள் பணத்தை வங்கியில் செலுத்துவோம். அதன்படி தான் நேற்று முன்தினம் விற்பனை செய்த தொகை, 2.20 லட்சம் ரூபாயை கடை லாக்கரில் வைத்து பூட்டி விட்டு சென்றேன்.
மர்ம நபர்கள் லாக்கரியை திறக்க முடியாததால் சில்லரை பணத்தை திருடிச் சென்றனர். மேலும், இரும்பு கேட் பூட்டை உடைத்தும், ஷட்டரை திறக்க முடியாததால், கடப்பாரையால் சுவரில் ஓட்டைப் போட்டு திருடிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

