/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவேங்கிடபுரத்தில் குரங்குகள் தொல்லை
/
திருவேங்கிடபுரத்தில் குரங்குகள் தொல்லை
ADDED : அக் 11, 2024 02:00 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரத்தில் கடந்த சில தினங்களாக குரங்கள் கூட்டமாக சுற்றத்திரிகின்றன. இவை வீடுகளின் மீது ஏறி அங்கிருந்து அடுத்தடுத்த வீடுகளுக்கு மீது தாவி தாவி பயணிக்கின்றன.
வீடுகளின் வெளியிலும், தளத்தின் மீதும் வற்றல், அரிசி உள்ளிட்டவைகளை உலர வைக்கும்போது குரங்குகள் அவற்றை வீணடிக்கின்றன.
திறந்து கிடக்கும் வீடுகளின் உள்ளே சென்று, அங்குள் உணவுப்பொருட்களை எடுத்து உண்ணுகின்றன. அவை அச்சுறுத்தும் வகையில் பார்ப்பதால், விரட்டுவதற்கு வீட்டில் உள்ளவர்கள் தயங்குகின்றனர்.
வீட்டிற்குள் புகுந்த குரங்குகள் தானாக வெளியேறும் வரை உரிமையாளர்கள் வெளியில் அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.
குடியிருப்புவாசிகள் வீட்டிற்குள் இருந்து வெளியில் வரும்போது, குரங்குளை விரட்டுவதற்கு கையில் குச்சி வைத்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.
மீஞ்சூர் ஒன்றியம் நிர்வாகம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம், பொன்னியம்மன் நகர், தசரதன் நகர் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.