/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசு உற்பத்தி அதிகரிப்பு கும்மிடியில் பரவும் காய்ச்சல்
/
கொசு உற்பத்தி அதிகரிப்பு கும்மிடியில் பரவும் காய்ச்சல்
கொசு உற்பத்தி அதிகரிப்பு கும்மிடியில் பரவும் காய்ச்சல்
கொசு உற்பத்தி அதிகரிப்பு கும்மிடியில் பரவும் காய்ச்சல்
ADDED : நவ 12, 2024 07:46 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 40.000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.
மேலும், தெருக்கள், சாலைகள் மற்றும் கால்வாய்கள் மட்டுமின்றி, வீடுகளிலும் தண்ணீர் தேங்கும் இடங்களிலும் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.
இதனால், நகர் பகுதி முழுதும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை சார்பில் கூறுகையில், ‛நாள் ஒன்றுக்கு சராசரியாக, 250 பேர் காய்ச்சல் பாதிப்பால், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் துரிதமாக செயல்பட்டு, கும்மிடிப்பூண்டியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.