/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாசி படிந்துள்ள கால்நடை குடிநீர் தொட்டி
/
பாசி படிந்துள்ள கால்நடை குடிநீர் தொட்டி
ADDED : டிச 27, 2024 01:40 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், புண்ணியம் கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு.
கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புண்ணியம் கிராமத்தின் வடமேற்கில் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது.
சிகிச்சை மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்காக, விவசாயிகள் தங்களின் கால்நடைகளை இங்கு ஓட்டி வருகின்றனர். சிகிச்சைக்காக காத்திருக்கும் கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த மருந்தக வளாகத்தில் கால்நடை குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.
முறையாக, தண்ணீரும் இந்த தொட்டியில் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், நீண்டகாலமாக சுத்தம் செய்யப்படாததால், இந்த தொட்டியில் பாசி படர்ந்துள்ளது.
இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கால்நடைகளின் ஆக்கியத்தை கருத்தில் கொண்டு, குடிநீர் தொட்டியை முறையாக சீரான இடைவெளியில் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.