/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் குழந்தைகளுக்கு சூடு வைத்த சம்பவத்தில் தாய் கைது
/
பொன்னேரியில் குழந்தைகளுக்கு சூடு வைத்த சம்பவத்தில் தாய் கைது
பொன்னேரியில் குழந்தைகளுக்கு சூடு வைத்த சம்பவத்தில் தாய் கைது
பொன்னேரியில் குழந்தைகளுக்கு சூடு வைத்த சம்பவத்தில் தாய் கைது
ADDED : ஜூலை 12, 2025 09:33 PM
பொன்னேரி:குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவத்தில், தாயை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில், கடந்த 1ம் தேதி இரண்டு குழந்தைகளின் கைகள் மற்றும் உடம்பில் ரத்த காயங்களும், தீக்காயங்களும் இருப்பதை கண்டு குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் உதவியுடன் குழந்தைகளை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பொன்னேரி போலீசார் விசாரித்ததில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சத்தியா, 23, என்பவரது, 5 வயது பெண், 3 வயது ஆண் குழந்தைகள் என்பது தெரிந்தது.
மேலும், கணவரை பிரிந்து வாழும் இவர், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு, பொன்னேரி நகராட்சியில் நடக்கும் பாதாள சாக்கடை பணிக்காக, இங்கு தங்கி வேலை பார்ப்பதும், தன் பேச்சை குழந்தைகள் கேட்காததால், சூடு வைத்ததும் தெரிந்தது.
இதுதொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, குழந்தைகளின் தாய் சத்தியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.