/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலத்தில் தடுப்பு இன்றி வாகன ஓட்டிகள் அச்சம்
/
பாலத்தில் தடுப்பு இன்றி வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 05, 2025 02:03 AM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில் இருந்து, குருத்தானமேடு கிராமத்திற்கு செல்லும் சாலை, ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ள சாலையாகும்.
அந்த சாலையின், குறுக்கே செல்லும் கால்வாய் மீது சிறுபாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் தடுப்புகள் உடைந்து பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
அவ்வழியாக ஏராளாமான வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் நிலையில், சற்று தடுமாறினாலும், கால்வாயில் வாகனத்துடன் கவிழ்ந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
அதனால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் அந்த பாலத்தை கடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, அந்த பாலத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.