/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்களமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
நெற்களமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஜூலை 28, 2025 11:23 PM

ஆர்.கே.பேட்டை, ராஜாநகரம் கிழக்கு கிராம விவசாயிகள், பள்ளிப்பட்டு செல்லும் சாலையை நெற்களமாக பயன்படுத்தி வருவதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜாநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாநகர் மேற்கு மற்றும் கிழக்கு கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
விவசாயிகளின் வசதிக்காக, ராஜாநகரம் மேற்கு கிராமத்தில், அம்மன் கோவில் அருகே ஊராட்சி நிதியில் நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெற்களத்தில், விவசாயிகள் கதிரடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நெற்களத்தை, ராஜாநகரம் கிழக்கு கிராம விவசாயிகள் பயன்படுத்தாமல், பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையை நெற்களமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
எனவே, சாலையை நெற்களாக பயன்படுத்தும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

