/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
பொன்னேரி சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
பொன்னேரி சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
பொன்னேரி சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : அக் 16, 2024 12:20 AM

பொன்னேரி:பொன்னேரி பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. புதிய தேரடி, லட்சுமியம்மன் கோவில் தெரு, வேண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நகராட்சி ஊழியர்கள் மணல் மூட்டைகளை போட்டு, குடியிருப்புகளுக்கு மழைநீர்புகுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், திருவாயற்பாடி பகுதியில் உள்ள சுரங்கபாதையில், நான்கு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது.
கார், வேன், பேருந்து தேங்கிய மழைநீரில் தத்தளித்தபடி பயணித்தன. இருசக்கர வாகனங்கள் தண்ணீர் செல்லும்போது, பழுதாகி நின்றன. வாகன ஓட்டிகள் அவற்றை சிரமத்துடன் தள்ளிக்கொண்டு சென்றனர்.
ஒரு சிலர் சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியிருப்பதை கவனித்து, பாலாஜி நகர், ஆலாடு சாலை வழியாக, நான்கு கி.மீ., சுற்றி பயணித்தனர்.
நகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் உதவியுடன் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். மழைக்காலம் வந்தாலும்,எப்போதுமே சுரங்கபாதையில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளதால், இதற்கு எப்போதுதான் நிரந்தர விமோசனம் கிடைக்குமோ என வாகன ஓட்டிகள் விரக்தியுடன் கூறிச்சென்றனர்.