/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறு குளமாக மாறிய சாலை தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்
/
சிறு குளமாக மாறிய சாலை தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 22, 2025 02:22 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் பகுதியிலிருந்து ஸ்ரீதேவிக்குப்பம், ஏகாட்டூர் ஏரிக்கரை வழியாக, திருவள்ளூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிவாசிகள், திருவள்ளூர் சென்று வருகின்றனர்.
இதில், ஏகாட்டூர் ஏரிக்கரை சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இரு நாட்களாக பெய்த மழையால், இந்த சாலை சிறு குளம் போல் மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் செல்வோர் சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏகாட்டூர் ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.