/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரைகுறை சாலை பணி வாகன ஓட்டிகள் திணறல்
/
அரைகுறை சாலை பணி வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : மே 16, 2025 02:44 AM

திருவாலங்காடு, அரக்கோணம் ---- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை 24 கி.மீ., உள்ளது. இச்சாலையில் திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து அரக்கோணம் வரையிலான, 9 கி.மீ., சாலையை முதற்கட்டமாக நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி 68 கோடி ரூபாய் மதிப்பில் நடந்தது.
திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் தக்கோலம், கனகம்மாசத்திரம், அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் சாலைகள் இணைக்கப்பட்டு ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டது.
ரவுண்டான பகுதியில் கனகம்மாசத்திரம் சாலையில் பணி அறைகுறையாக செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள சிறு தரைப்பாலத்தில் தார் நிரப்பி சாலை அமைக்காததால் பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதேபோல வடாரண்யேஸ்வரர் கோவில், திருவள்ளூர் சாலையும் இணைப்பு பகுதிகள் அறைகுறையாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீர்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.