/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி நெடுஞ்சாலையில் பள்ளங்கள் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
/
திருத்தணி நெடுஞ்சாலையில் பள்ளங்கள் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
திருத்தணி நெடுஞ்சாலையில் பள்ளங்கள் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
திருத்தணி நெடுஞ்சாலையில் பள்ளங்கள் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 18, 2024 02:43 AM

திருத்தணி:திருத்தணி ம.பொ.சி.சாலை பஜார் பகுதி மற்றும் பைபாஸ் சாலையில் இருந்து ரயில்வே தரைப்பாலம் ஆகிய இடங்களில், 5 க்கும் மேற்பட்ட மெகா பள்ளங்கள் உள்ளன.
இந்த வழியாக, 24 மணி நேரமும் அனைத்து ரக வாகனங்கள் மற்றும் அரசு தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. குறிப்பாக அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் செல்கிறது.
மேற்கண்ட இரண்டு பகுதிகளில் மாநில நெடுஞ்சாலையில், மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
மேலும் பாதசாரிகளும், பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.
குறிப்பாக பைபாஸ் ரயில்வே தரைப்பாலம் பகுதியில், எதிர் எதிரே நான்கு மெகா பள்ளங்கள் உள்ளதால் தினமும், குறைந்த பட்சம், 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர்.
மெகா பள்ளங்களை சீரமைக்காமல் திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர் பல மாதங்களாக காலதாமதம் செய்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மெகா பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
l திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையுடன் நாராயணபுரம் கூட்ரோடில் இணைகிறது.
இச்சாலை வழியாக தினமும் திருவள்ளூர், சென்னை, திருத்தணி, திருப்பதி என பல்வேறு நகரங்களுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இடத்தில் மாநில நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக இச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அதிகம் அவர்கள் இந்த பள்ளத்தால் தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் மெத்தனமாக செயல்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே உயரதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.