/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பையால் துர்நாற்றம் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
குப்பையால் துர்நாற்றம் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஜூன் 23, 2025 11:09 PM

சோழவரம்,
தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரங்களில் குப்பை கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால், துர்நாற்றம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் உள்ள இணைப்பு சாலையோரம் குப்பை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகள் கொண்டு வந்து குவிக்கப்படுகிறது.
இவை, அவ்வப்போது எரிக்கப்படுவதால், குப்பையில் உள்ள பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்டவற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து, லாரிகளில் கழிவுநீர் கொண்டு வந்து, இரவு நேரங்களில் இங்கு கொட்டப்படுகிறது.
இதனால், இணைப்பு சாலையில் பயணிப்போர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுகள் கொட்டி குவிக்கப்படும் இடத்திற்கு, 50 மீட்டர் தொலைவில், சென்னையின் குடிநீர் ஆதாரங்களின் ஒன்றான சோழவரம் ஏரி அமைந்துள்ளது.
எனவே, குப்பை மற்றும் கழிவுநீர் கழிவுகளால், ஏரியும் மாசடையும் அபாயம் உள்ளது. இணைப்பு சாலை பகுதிகளில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.