/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செயல்படாத தானியங்கி சிக்னல் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
/
செயல்படாத தானியங்கி சிக்னல் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
செயல்படாத தானியங்கி சிக்னல் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
செயல்படாத தானியங்கி சிக்னல் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஏப் 28, 2025 02:08 AM

தொடுகாடு:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பராசங்குபுரம் பகுதி அருகே ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் மற்றும் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளது காட்டு கூட்டு சாலை சந்திப்பு.
இவ்வழியே தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் உள்ள தானியங்கி சிக்னல் கடந்த சில தினங்களாக பழுதடைந்து இயங்காமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து மிகுந்த காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசாரும் இல்லாததால் வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானியங்கி சிக்னலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.