/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வர்ணம் இல்லாத வேகத்தடையால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
வர்ணம் இல்லாத வேகத்தடையால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
வர்ணம் இல்லாத வேகத்தடையால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
வர்ணம் இல்லாத வேகத்தடையால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 17, 2025 11:13 PM

ஊத்துக்கோட்டைஎல்லாபுரம் ஒன்றியம், பாலவாக்கம் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், இவ்வூர் உள்ளது. சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் பாலவாக்கம் வழியே செல்கின்றன.
இப்பகுதி வழியே செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால், விபத்துகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் வேகத்தடை வைக்கப்பட்டு உள்ளது. பாலவாக்கம் மின்வாரிய அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் இல்லாமல் உள்ளது.
அதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, பாலவாக்கம் மின்வாரிய அலுவலகம் அருகே, வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.