/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எச்சரிக்கை பலகை இன்றி பால பணி விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
எச்சரிக்கை பலகை இன்றி பால பணி விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
எச்சரிக்கை பலகை இன்றி பால பணி விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
எச்சரிக்கை பலகை இன்றி பால பணி விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மே 05, 2025 11:41 PM

கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து பாத்தப்பாளையம் வழியாக ஈகுவார்பாளையம் வரையிலான சாலையை, மாநில நெடுஞ்சாலை துறையினர் விரிவாக்கம் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பாத்தப்பாளையம் கிராமத்தில், 'காமாட்சி' தொழிற்சாலை அருகே பாக்ஸ் பாலம் நிறுவப்பட்டு வருகிறது.
பால பணிகள் நடக்கும் இடத்தில் மாற்று பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. பால பணிகள் நடப்பதற்கும், மாற்று பாதை இருப்பதற்குமான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை.
இரவு நேரத்தில் அவ்வழியாக புதிதாக செல்வோர், தாராபுரம் தம்பதி உயிரிழப்பு போன்று விபத்தில் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக, கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பால பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து சாலையின் இரு பக்கமும், 100 மீட்டருக்கு முன், ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் வைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல, கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள சூரப்பூண்டி பேருந்து நிறுத்தத்திலும், ராமசந்திரபுரத்திலும் பால பணிகள் நடந்து வருகின்றன. அந்த இடங்களிலும் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.