/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேப்பம்பட்டு ரயில்வே கடவுப்பாதையை ஆபத்தான முறையில் கடக்கும் வாகன ஓட்டிகள்

ADDED : மே 23, 2025 03:00 AM

வேப்பம்பட்டு:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருநின்றவூர் - வேப்பம்பட்டு இடையே ரயில்வே கேட் உள்ளது.
இவ்வழியே வேப்பம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் பெருமாள்பட்டு, புதுச்சத்திரம், திருமழிசை, பூந்தமல்லி வழியாக சென்னைக்கு சென்று வருகின்றனர்.
இந்த ரயில்வே கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால் இப்பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த கடவுப்பாதை மூடப்பட்டிருக்கும் போது, இரு சக்கர வாகனங்களில் வருவோர் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலையும் நடந்து வருகிறது.
மேலும் இப்பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு ரயில்வே பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் 2018 ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை பகுதியில் துவங்கிய மேம்பால பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.