/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நொச்சிலி ஓடையில் தரைப்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
நொச்சிலி ஓடையில் தரைப்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
நொச்சிலி ஓடையில் தரைப்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
நொச்சிலி ஓடையில் தரைப்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : அக் 30, 2025 12:24 AM

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டுக்கு மாற்றுப்பாதையாக உள்ள நொச்சிலி மார்க்கத்தில், ஓடையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் நெடுஞ்சாலையில், கோரகுப்பம் அருகே பலிஜிகண்டிகையில், ஆந்திர மாநில எல்லை குறுக்கிடுகிறது.
இந்த பகுதியில் மாநில வணிகவரி சோதனைச்சாவடி, ஆந்திர மாநில போலீஸ் சோதனைச்சாவடிகளை கடந்து செல்ல வாகன ஓட்டிகள், பல்வேறு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டுக்கு செல்ல, ஆந்திர மாநில சோதனைச்சாவடியை கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்கு மாற்றுப்பாதையாக அமைந்துள்ள நொச்சிலி, பொதட்டூர்பேட்டை சாலை வழியாக, ஏராளமான சரக்கு வாகனங்கள் பயணிக்க துவங்கியுள்ளன.
ஆந்திர மாநில போலீசாரின் கெடுபிடிக்கு பயந்து, இருசக்கர வாகன ஓட்டிகளும் பலிஜி கண்டிகை சாலையை தவிர்த்து நொச்சிலி வழியாக பயணிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த மார்க்கத்தில், நொச்சிலி அருகே சாலையில் குறுக்கிடும் ஓடையில் பாயும் வெள்ளத்தை கடந்து செல்ல பாலம் இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த ஓடையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவும், சாலையை இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

