/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தெருக்களில் பன்றிகள் உலா திருவாலங்காடு மக்கள் பீதி
/
தெருக்களில் பன்றிகள் உலா திருவாலங்காடு மக்கள் பீதி
தெருக்களில் பன்றிகள் உலா திருவாலங்காடு மக்கள் பீதி
தெருக்களில் பன்றிகள் உலா திருவாலங்காடு மக்கள் பீதி
ADDED : அக் 30, 2025 12:23 AM

திருவாலங்காடு: சாலைகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், திருவாலங்காடு மக்கள் பீதியில் உள்ளனர்.
திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சன்னிதி தெரு, தெற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி உள்ளிட்ட பகுதிகளில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு, நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், குடியிருப்பு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:
திருவாலங்காடு ஊராட்சியில் பி.டி.ஓ., அலுவலகம், வடாரண்யேஸ்வரர் கோவில், காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
சாலையோரம் கொட்டப் பட்டுள்ள குப்பை கழிவுகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வாகனங்கள் செல்லும்போது திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, குடியிருப்பு மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ள பன்றிகளை பிடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

