/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத சமுதாய கூடம் மதுக்கூடமாக மாறிய அவலம்
/
பராமரிப்பில்லாத சமுதாய கூடம் மதுக்கூடமாக மாறிய அவலம்
பராமரிப்பில்லாத சமுதாய கூடம் மதுக்கூடமாக மாறிய அவலம்
பராமரிப்பில்லாத சமுதாய கூடம் மதுக்கூடமாக மாறிய அவலம்
ADDED : அக் 30, 2025 12:22 AM

வயலுார்: வயலுார் ஊராட்சியில் பராமரிப்பில்லாத சமுதாய கூடம் மது அருந்தும் கூடமாக மாறி வருவது பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடத்தில் மின் இணைப்பு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
இதனால் பகுதி மக்கள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதோடு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் போன்ற பகுதிகளுக்கு சென்று, தனியார் மண்டபங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயன்பாடில்லாத இந்த சமுதாய கூடத்தை 2014 - 15ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் 70,000 ரூபாய் மதிப்பில் வர்ணம் பூசும் பணி மட்டும் மேற்கொள்ளப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இந்நிலையில், தற்போது இந்த சமுதாய கூடம் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சமுதாய கூடத்தை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென, வயலுார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

