/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் எதிரே மைய தடுப்பு வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
/
டாஸ்மாக் எதிரே மைய தடுப்பு வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
டாஸ்மாக் எதிரே மைய தடுப்பு வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
டாஸ்மாக் எதிரே மைய தடுப்பு வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 17, 2025 08:59 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து அம்மையார்குப்பம் மற்றும் சோளிங்கர் செல்லும் சாலைகளை ஒட்டி இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பிரதான சாலையில் இருந்து, இந்த டாஸ்மாக் கடைகளுக்கு குறுகலான பாதை வசதி உள்ளது.
இந்த டாஸ்மாக் கடைகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பிரதான சாலையில் இருந்து திடீரென டாஸ்மாக் கடைக்கு திரும்பும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எதிர்திசையில் வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல், சாலையை கடக்கும் வாகனங்களால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு திரும்பும் பகுதியில், பிரதான சாலையில் மைய தடுப்பு ஏற்படுத்தினால் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்.
எனவே, ஆர்.கே.பேட்டையில் உள்ள சோளிங்கர் மற்றும் அம்மையார்குப்பம் சாலைகளில், டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் பகுதியில், மைய தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.