/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
/
சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : டிச 12, 2025 06:33 AM

சோழவரம்: தேவனேரியில், தேசிய நெடுஞ்சாலையின், இணைப்பு சாலையில் மழைநீர் தேங்கி, வெளியேறாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த தேவனேரி பகுதியில் உள்ள இணைப்பு சாலையில், மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
அங்கு, தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சுரங்கபாதையிலும் மழைநீர் தேங்கி இருப்பதால், எஸ்.பி.நகர், சோழவரம் பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இணைப்பு சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
கார்,பைக் உள்ளிட்டவை அந்த சாலையில் செல்லும்போது, வாகனங்களின் உட்பகுதியில் தண்ணீர் புகுந்து, பழுதாகி நிற்கின்றன. இணைப்பு சாலையின் அருகில் உள்ள கால்வாயும் சேதம் அடைந்து, கட்டுமானங்கள் சிதைந்து கிடக்கின்றன. தேங்கியுள்ள மழைநீரில் கால்வாய் இருப்பதும் தெரியவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் சாலையின் ஓரமாக சிரமத்துடன் சென்று வருகின்றனர். இணைப்பு சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கால்வாயை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

