/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம்
ADDED : டிச 12, 2025 06:32 AM
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய, நாளை மற்றும் 14ம் தேதிகளில், சிறப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி, 10 சட்டசபை தொகுதியிலும் நடைபெற்று வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 16ம் தேதி வெளியிடப்படும். மறுநாள், 16ம் தேதி முதல் ஜன.15 வரை, உரிமை கோரல் மற்றும் மறுப்புரை பெறப்பட்டு, பிப்.7 வரை விசாரணை மற்றும் சரிபார்ப்பு செய்யப்படும். இறுதி பட்டியல் வரும் பிப்.14 அன்று வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பேர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர், அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து, ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலகத்திலும், https://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக, நாளை 13 மற்றும் 14ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடி மையத்திலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

