/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதான மின்மாற்றியை சீரமைக்க பணம் கேட்கும் அதிகாரிகள் நுகர்வோர் கூட்டத்தில் சரமாரி புகார்
/
பழுதான மின்மாற்றியை சீரமைக்க பணம் கேட்கும் அதிகாரிகள் நுகர்வோர் கூட்டத்தில் சரமாரி புகார்
பழுதான மின்மாற்றியை சீரமைக்க பணம் கேட்கும் அதிகாரிகள் நுகர்வோர் கூட்டத்தில் சரமாரி புகார்
பழுதான மின்மாற்றியை சீரமைக்க பணம் கேட்கும் அதிகாரிகள் நுகர்வோர் கூட்டத்தில் சரமாரி புகார்
ADDED : டிச 12, 2025 06:30 AM
திருத்தணி: 'பணம் கொடுத்தால் மட்டுமே, பழுதான மின்மாற்றியை சீரமைக்க முடியும். பணம் கொடுங்கள் என, மின்வாரிய அதிகாரிகள் நெருக்கடி தருகின்றனர்' என, மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
திருத்தணி -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர், குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்தார். திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் முருகபூபதி வரவேற்றார்.
குறைந்த அழுத்த மின்சாரம், மின் ஒயர்கள் தாழ்வாக செல்வதால் விவசாய பணிகளில் ஈடுபட முடியாத நிலையில், கூடுதல் மின்மாற்றி ஏற்படுத்த வேண்டும் என, மேற்பார்வை பொறியாளரிடம், அகூர் கிராம விவசாயிகள் மனு வழங்கினர்.
கூட்டத்தில், திருத்தணி அடுத்த நெடும்பரம் கிராம விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அளித்த மனு:
எங்கள் பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து, 25 விவசாய கிணறுகள், 10 கடைகளுக்கு மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, 1ம் தேதி மின்மாற்றி பழுதடைந்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதுவரை மின்மாற்றி பழுது பார்க்காமல் உள்ளது.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்கும் போது, மின்மாற்றியில் இருந்த, 200 லிட்டர் ஆயில் திருட்டு போனது, அந்த ஆயில் வாங்க, 20,000 ரூபாய் தேவை.
அந்த தொகை நீங்கள் வழங்கினால் தான் மின்மாற்றியை சீரமைத்து, மின்வினியோகம் செய்ய முடியும் என, கூறுகின்றனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய உயரதிகாரிகள் உறுதி அளித்தனர்.

