/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா ஊர் ஊராக தந்தைக்கு சிலை முக்கியமா? அரசுக்கு அண்ணாமலை கேள்வி

ADDED : டிச 12, 2025 06:30 AM
ஊத்துக்கோட்டை: 'ஊர், ஊராக சென்று தந்தைக்கு சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசு பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா' என தமிழக முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் வகுப்பறை பற்றாக்குறையால் மாணவ, மாணவியர் மைதானத்தில் அமர வைத்து பாடம் நடத்துவது தொடர்ந்து நடந்து வந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பெற்றோரின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதை எல்லாம், தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. உண்மையில் அரசு பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மாவட்டம் உட்பட தமிழகம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளின் நிலைமையை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.